Batch students important update :
அனைவருக்கும் வணக்கம்.
இன்று - 8 BOOKS PACKING பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
உங்களுக்கு சரியான நேரத்தில், தரமான முறையில் அனைத்து புத்தகங்களும் மற்றும் பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஒட்டுமொத்த அணியும் இடைவிடாமல் உழைத்து வருகிறது.
பிரிண்டிங், லோடிங், பிரித்தல், சரிபார்த்தல், பேக்கிங் என ஒவ்வொரு கட்டத்திலும் பலர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். எந்த தவறும் இல்லாமல், எந்த மாணவரும் விடுபடாமல், அனைவருக்கும் சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கம்.
TRACKING PDF இன்று மாலை வழங்கப்படும். 2 அல்லது 3 PDF-கள் வரும். அதில் உங்கள் விவரங்களை சரிபார்த்து கொள்ளுங்கள்.
ஆட்கள் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டு PACKING பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணி முடிந்தவுடன், அடுத்த கட்டமாக உங்களை இன்னும் BOOST UP செய்து வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்த உள்ளோம்.
நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) குறித்து பயப்பட வேண்டாம். அதற்கும் எங்களிடம் திட்டம் உள்ளது. அதன் பின்னணிப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதேபோல், அரசு சார்ந்த PDF-களை உங்களுக்கு அனுப்பியுள்ளோம். அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எந்த அளவிற்கு அது தேர்வில் உதவும் என்பதையும் விரைவில் விளக்க உள்ளோம்.
ETHICS வீடியோ கொடுத்து வந்தேன் ஆனால் அதற்குள் ஆங்கில மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான வினாத்தாள் சரிபார்ப்பு பணிகளும் தொடங்கியுள்ளன.
மறுபுறம், இரண்டு PRINT PRESS-களில் ஒரே நேரத்தில் அச்சடிப்பு பணிகளை மேற்கொண்டு வேகமாக செயல்பட்டு வருகிறோம்.
ஆங்கில மாணவர்கள் மாணவிகள் மட்டும் 1 வாரம் ஆகி விடும் இனிமேல் தான் பிரிண்ட் செய்ய உள்ளார்கள்
தமிழ் மாணவர்கள் மாணவிகளுக்கு தான் இன்று பேக்கிங் நடைபெறுகிறது
இது ஒரு மிகப் பெரிய செயல்முறை. வெளியிலிருந்து பார்க்கும்போது எளிதாகத் தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு மாணவருக்கும் சரியான நேரத்தில், முழுமையான தரத்துடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல நாட்களாக தொடர்ந்து உழைத்து வருகிறோம்.
கடந்த 5 நாட்களாக நான் மற்றும் எங்கள் அணி முழு அர்ப்பணிப்புடன் இந்தப் பணியில் ஈடுபட்டோம். இந்த முயற்சிகள் இல்லையென்றால் இன்னும் தாமதமாகி இருக்கும். சரியான நேரத்தில் செய்வதற்கே மதிப்பு உண்டு என்பதால், இந்த வேலைகளை முன்னுரிமையுடன் முடித்துள்ளோம்.
GROUP-2 தேர்வு வருவதற்கு முன்பாக உங்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்.
🔥 ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…
“வெற்றி பெற்றவர்கள் வேறு எதையும் செய்யவில்லை; மற்றவர்கள் கைவிட்ட இடத்தில் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.”
இன்று நாம் செய்யும் இந்த உழைப்பு, நாளை உங்கள் வெற்றியின் அடித்தளமாக மாறும்.
நீங்கள் படிப்பதை மட்டும் நிறுத்தாதீர்கள்…
நாங்கள் உங்களை வழிநடத்துவதை நிறுத்தமாட்டோம்…
உங்கள் வெற்றி எங்கள் இலக்கு
நம்பிக்கையுடன் இருங்கள்… தொடர்ந்து உழையுங்கள்… வெற்றி நிச்சயம் உங்களுடையதே! 💪🔥
நன்றி.
SAIS ACADEMY