அறமே உரிமை
"உரிமை (RIGHT): ஒரு பெயர்ச்சொல்லாகவும், அரும்-பொருளாகக் (abstract) கொள்ளும்போது, இது நீதி, அறநெறிச் சரித்தன்மை, அல்லது சட்ட விதிகளுடனும் ஒழுக்கக் கோட்பாடுகளுடனும் கொண்டுள்ள இணக்கத்தைக் குறிக்கும். இந்த அர்த்தத்தில், இது லத்தீன் மொழியின் "Jus" (அறம்) என்ற சொல்லின் ஒரு பொருளுக்கு இணையாக அமைந்து, அருவமான(Abstract) நிலையிலுள்ள சட்டத்தைச் சுட்டிக்காட்டப் பயன்படுகிறது. இதுவே அனைத்து உரிமைகளுக்கும் அடிப்படையாகக் கருதப்படுகிறது, அல்லது அனைத்து இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் (positive law) நீதியின் தன்மையை வழங்குகிற அல்லது அதற்கு ஓர் அறநெறி உள்ளடக்கத்தை அளிக்கிற அடிப்படையான ஒழுக்கக் கோட்பாடுகளின் தொகுப்பாக விளங்குகிறது.
ஒரு பெயர்ச்சொல்லாகவும், உருப்பொருளாகவும் (concrete) கொள்ளும்போது, இது ஒரு நபரிடம் இயல்பாகவே அமைந்திருப்பதும், மற்றொரு நபர் மீது கடப்பாட்டை ஏற்படுத்துவதுமான ஓர் அதிகாரம், சலுகை, தகுதி அல்லது கோரிக்கையாகும். "உரிமைகள்" பொதுவாக "சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரங்கள்" என வரையறுக்கப்படுகின்றன. மனிதர்களுக்குரிய முதன்மையான உரிமைகள், எவ்வித ஐயமுமின்றி, மனிதர்கள் மனிதர்களாக இருப்பதனாலேயே அவர்களால் அனுபவிக்கப்படுகின்றன; இவை மனித ஆளுமையில் வேரூன்றியவை, மற்றும் இயற்றப்பட்ட சட்டங்கள் அவற்றை அங்கீகரிப்பதற்கு முன்பிருந்தே நிலவி வருபவை ஆகும்.
இருப்பினும், இந்த அருவமான ஒழுக்கவியல் எல்லையைக் கடந்து, இச்சொல்லுக்கு ஒரு சட்டரீதியான (juristic) உள்ளடக்கத்தை வழங்கும்போது, ஓர் "உரிமை" என்பது "அரசின் சம்மதம் மற்றும் உதவியுடன், தன்மீதான பிறரது செயல்பாடுகளை பொருத்தமான வகையில் கட்டுப்படுத்துவதற்கு ஒரு மனிதனிடம் உள்ள திறன்" எனச் செம்மையாக வரையறுக்கப்படுகிறது." - Holl. Jur. 69.
- Black's law dictionary, 4th edition - 1968
RIGHT. As a noun, and taken in an abstract sense, justice, ethical correctness, or consonance with the rules of law or the principles of morals. In this signification it answers to one meaning of the Latin "jus," and serves to indicate law in the abstract, considered as the foundation of all rights, or the complex of underlying moral principles which impart the character of justice to all positive law, or give it an ethical content.
As a noun, and taken in a concrete sense, a power, privilege, faculty, or demand, inherent in one person and incident upon another. "Rights" are defined generally as "powers of free action." And the primal rights pertaining to men are undoubtedly enjoyed by human beings purely as such, being grounded in personality, and existing antecedently to their recognition by positive law.
But leaving the abstract moral sphere, and giving to the term a juristic content, a "right" is well defined as "a capacity residing in one man of controlling, with the assent and assistance of the state, the actions of others." Holl. Jur. 69.